ஆர்யா-விக்ரம் நேரடி மோதல்
ராஜேஷ் எம்.இயக்கத்தில் ஆர்யா,தமன்னா,சந்தானம் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப் போவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
அதே தேதியில் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள திரைப்படமும் வெளியிடப்போவதாக பாக்ஸ் ஸ்டார் அறிவித்துள்ளது. விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இரண்டு பெரிய ஹீரோக்கள் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.