“70 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்:ஐ.நா அதிர்ச்சி தகவல்”
ஊட்டச்சத்து குறைபாடுகளின் காரணமாக, சர்வதேச நாடுகளின் அலட்சியத்தால், அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சுமார் 70 மில்லியன் குழந்தைகள் உலகம் முலுவதும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.
ஐ.நா சபையில் ஒரு அங்கமாக விளங்கிவரும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான Unicef மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை இன்று வெளிட்டது.
அதில், சர்வதேச அளவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் தவித்து வருவதுடன், அவர்களின் இறப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பல குழந்தைகள் தனது 5 வயதை முடிப்பதற்குள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறக்க நேரிடுகிறது.இந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்க முடியும். ஆனால், உலக நாடுகள் அதற்கான நடவடிக்கையில் ஈடுப்படுவதில்லை என ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக Unicef-ன் தலைமை அதிகாரியான Anthony Lake பேசியதில் , இந்த பூதகரமான பிரச்சனையை முற்றிலுமாக தீர்க்க உலக நாடுகள் ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தற்போதைய காலத்திலும் கூட, உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு சுமார் 119 குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்து மற்றும் ஆதரவு இல்லாமல் போராடி இறந்துவருகிறார்கள்.
இந்த ஊட்டச்சத்து குறைபாடின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இதன் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
மேலும் 25 வருடங்களுக்கு முன்னர் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 12.7 மில்லியனாக இருந்தது என்றும், அது தற்போது 6 மில்லியனாக குறைந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.